மேட்டூர் அணையில் சோதனை.
மேட்டூர் அணையில் வெடிகுண்டு நிபுனர்கள் சோதனை செய்தனா்;
By : King 24x7 Website
Update: 2023-12-06 17:55 GMT
மேட்டூர் அணையில் வெடிகுண்டு நிபுனர்கள் சோதனை செய்தனா்
சேலம் மாவட்டம்,மேட்டூர் அணையில் ஓய்வு பெற்ற துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் 34 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு சேலத்தில் இருந்து உதவி ஆய்வாளர் அசோகன் தலைமையில் 6 பேர் கொண்ட வெடிகுண்டு நிபுணர்கள் மேட்டூர் அணைக்கு வந்தனர். அவர்கள் மோப்பநாய் தாரணி மற்றும் மெட்டல் டிடெக்டர் கொண்டு மேட்டூர் அணையில் சோதனை செய்தனர். அணையின் நுழைவு பகுதி, வலது கரை, இடது கரை, கீழ்மட்ட மதகு, மேல்மட்ட மதகு, பவளவிழா கோபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் தலைமை காவலர் பூவராகவன், காவலர்கள் அழகேசன், குழந்தைவேல், கந்தசாமி, செளந்தர் ஆகியோர் ஈடுபட்டனர்.