தஞ்சை திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட, சிபிஎம் கூட்டத்தில் முடிவு 

தஞ்சாவூர் திமுக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட, சிபிஎம் திருவையாறு சட்டமன்றத் தொகுதி கூட்டத்தில் முடிவு 

Update: 2024-03-29 15:12 GMT
சிபிஎம் கூட்டத்தில் முடிவு 

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதிக்கு உட்பட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு மற்றும் முன்னணி ஊழியர்கள் பங்கேற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம், வியாழக்கிழமை மாலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் கட்சி அலுவலகத்தில், தெற்கு ஒன்றியச் செயலாளர்  சி.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. 

இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி  துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினரும், திருவையாறு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான என்.வி. கண்ணன் நிறைவுரையாற்றினார்.  பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ், தஞ்சை ஒன்றியச் செயலாளர்  கே.அபிமன்னன்,

மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி, திருவையாறு ராமு ஆகியோர் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனைகளை வழங்கிப் பேசினர். இதில், கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில், "தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர்  ச.முரசொலியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது, தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது,

வீடுகள் தோறும் துண்டுப் பிரசுரம் கொடுத்து வாக்குச் சேகரிப்பது, ஏப்.2 இல், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தேர்தல் பரப்புரையை தொடங்கும் புதுக்குடியில் இருந்து, தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில் பங்கேற்று வாக்குச் சேகரிப்பது,

ஏப்.4 கட்சி மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பரப்புரை, ஏப்.9-வேட்பாளர் முரசொலி பரப்புரை ஆகியவற்றில் திரளாக கட்சியினர் பங்கேற்பது" எனத் தீர்மானிக்கப்பட்டது.

Tags:    

Similar News