தஞ்சாவூர்: பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2024-05-25 16:06 GMT

புத்தகங்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வு முடிந்து தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின் வரும் ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதனிடையே தமிழக பாடநூல் கழகம் சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் வரும் கல்வி ஆண்டுக்கு தேவையான பாட புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் வந்துள்ளது. தஞ்சாவூர் மேம்பாலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள புத்தக சேமிப்பு குடோனில் இருந்து பாடவாரியாக புத்தகங்கள் தரம் பிரிக்கப்பட்டு தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான பாடப்புத்தகங்களை லாரிகள் மூலம் அனுப்பும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் மற்றும் ஆங்கில வழி புத்தகங்கள் தனித்தனியாக பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. இந்தப் புத்தகங்கள் அனைத்தும் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு விடும். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 197 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு வழங்க பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி நடக்கிறது. இதேபோல் நோட்டுகள், பைகள், சீருடை உள்ளிட்டவைகளும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த பணிகள் எல்லாம் பள்ளிகள் திறப்பதற்கு முன்பாக நிறைவு பெறும். பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு இவை அனைத்தும் வழங்கப்படும்" என்றனர்.

Tags:    

Similar News