போதகரை வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது !!
ஆறுகாணி அருகே போதகரை வாளால் வெட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
வெள்ளரடை அடுத்த கன்னனூர் கூட்டப்பு சாலையில் சென்ற குமரி மாவட்டம் ஆறுகாணி பகுதியை சேர்ந்த போதகர் அருள் உள்ளிட்டவர்களை ஒரு கும்பல் வாளால் பயங்கரமாக வெட்டி காயப்படுத்தியுள்ளனர். அந்த கும்பல் அருகில் இருந்த வீட்டையும் அடித்து நொறுக்கியது. அந்த கும்பல் பைக் மற்றும் மொபைல் போனை திருடிச் சென்றது.
அந்த கும்பலில் இருந்த 17 வயது இளைஞனை அந்த நேரத்திலேயே அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து கன்னியாகுமரியில் பதுங்கியிருந்த அபின்ராய் மற்றும் அகில் லால் ஆகியோர் அடுத்த இரு நாட்களில் காவல்துறை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கடைசி குற்றவாளியும் கைதாகியுள்ளார்.
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து மலையின்கீழை சேர்ந்த அபிஷேக் என்பவரை கேரள வெள்ளரடா போலீசார் கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் பிடிபட்டனர்.தாக்குதலுக்கு பிறகு அபிஷேக் பெங்களூரில் பதுங்கி இருந்தார்.
அபிஷேக் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்தடைந்தார். இரகசியத் தகவலைப் பெற்ற வெள்ளரடா போலீசார் விமான நிலையத்திலேயே மடக்கிப் பிடித்தனர். அபிஷேக் பல குற்ற வழக்குகளில் ஏற்கனவே குற்றவாளி ஆவார்.