தங்கதேர் இழுத்த அதிமுகவினர்

செங்கோட்டை அருகே திருமலைகுமாரசாமி கோவிலில் அதிமுகவினர் தங்கதேர் இழுத்தனர்.

Update: 2024-05-14 07:54 GMT

செங்கோட்டை அருகே திருமலைகுமாரசாமி கோவிலில் அதிமுகவினர் தங்கதேர் இழுத்தனர்.


தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி திருமலைக்குமார சாமி கோவிலில் முன்னாள் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு தென்காசி வடக்குமாவட்ட அஇஅதிமுக சார்பில் திருமலைக்குமாரசாமி மற்றும் பரிவார தேவதை களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடத்தப்பட்டு தங்கதேர் இழுத்து வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்குமாவட்ட அஇஅதிமுக செயலாளரும் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா தலைமைதாங்கினார். முன்னாள் அமைச்சர் கழக மகளிரணி துணை செயலாளர் விஎம். ராஜலெட்சுமி, திருநெல்வேலி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு சிவ ஆனந்த், மாவட்ட இணை செயலாளா் சண்முகப்ரியா, மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை சோ. மாரியப்பன், மாவட்ட பொருளாளா் சண்முகையா ஆகியோர் முன்னிலைவகித்தனா். கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட தங்தேரில் தீபாராதனையுடன் உற்சவ மூர்த்தி எழுந்தருளினார். பின்னா் தங்கதேரினை தென்காசி வடக்குமாவட்ட அஇஅதிமுக செயலாளா் கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா மற்றும் கழக பேரூர், ஒன்றிய நகர நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் அரோகரா கோஷங்கள் முழங்கியபடி கோவிலை சுற்றி இழுத்து வந்தனா். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News