குவைத் தீ விபத்தில் உயிரிழந்த உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது !

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த ராமுவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

Update: 2024-06-15 04:57 GMT

குவைத் தீ விபத்து

குவைத்தின் மங்காப் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில்,நேற்று முன்தினம் அதிகாலை திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர் 50 ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரும் கேரளாவைச் சேர்ந்த 26 பேரும் உள்ளடங்கினர்.

இந்நிலையில், இந்தியர்களின் உடல்களை கொண்டு வர இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் நேற்று குவைத்துக்குச் சென்றிருந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இன்று கொச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின் கொச்சியிலிருந்து மதியம் உடல்கள் அவரவரின் சொந்த ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தை சேர்ந்த கருப்பண்ணன் மகன் ராமு என்பவரின் உடல் இன்று இரவு ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊருக்கு வந்தடைந்தது உடலைப் பார்த்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுது வருகின்றனர்.

இதன் பின் அவரது உடல் காலை நல்லடக்கம் செய்யப்படுகிறது மேலும் அவரது இறப்பு குறித்து கிராம தலைவர் கூறுகையில் தீ விபத்தில் இறந்த செய்தி கேட்டு கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர் மேலும் மத்திய மாநில அரசுகள் அவரது உடலை துரிதமாக கொண்டு வந்ததற்கு நன்றிகள் தெரிவித்தார்.

Tags:    

Similar News