எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற வேட்பாளர்!

எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து திருவண்ணாமலை வேட்பாளர் வாழ்த்து பெற்றார்.

Update: 2024-03-23 09:09 GMT

எடப்பாடி பழனிச்சாமி

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திருவண்ணாமலை தெற்கு ஒன்றிய செயலாளர் தென்மாத்தூர் கலியபெருமாள் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாவட்ட செயலாளர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் உள்ளிட்ட அ.தி.மு.க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News