'தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வருக்கு மனமில்லை'- அண்ணாமலை

பாமக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு

Update: 2024-07-06 06:14 GMT

அண்ணாமலை 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து திருவாமாத்துார், சூரப்பட்டு, அன்னியூர், நேமூர், ராதாபுரம் கிராமங்களில் பிரசாரம் செய்த அவர் பேசியதாவது:தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு மனமில்லை. பீகார், கர்நாடகா மாநிலங்களில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்குகளை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பிரதமர் மோடி தடையாக இருக்க மாட்டார். அவர் முழு ஆதரவோடு உள்ளார்.கடந்த 2007-2008ம் ஆண்டு 69 சதவீத இடஒதுக்கீடு வழக்கு வந்த போது தமிழகத்தில் கணக்கெடுப்பு நடத்த நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழக முதல்வர் கணக்கெடுப்பு நடத்தவில்லை. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.இந்த தேர்தலில் நமது பா.ம.க., வேட்பாளர் அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் ஓட்டளித்து பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.அப்போது மாநில துணைத் தலைர் சம்பத், மாவட்ட தலைவர் கலிவரதன், பா.ம.க., சமூக நீதி பேரவை பாலு, மாவட்ட அமைப்பாளர்கள் பழனிவேல், மணிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News