வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்தார் ஆட்சியர்

ஊரக வளர்ச்சித் துறையினர் வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Update: 2023-12-20 04:10 GMT

வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், நாகம்பள்ளி ஊராட்சி பகுதியில், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், பெத்தான்கோட்டை கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.12.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பொது விநியோக அங்காடி புதிய கட்டிடப் பணிகளையும், பெத்தான்கோட்டை கிராமப் பகுதியில் 15வது மத்திய நிதி குழு மானியம், கிராம ஊராட்சி திட்டத்தின் கீழ் ரூ.7.31 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், அதே பகுதியில் 15 வது மத்திய நிதி குழு மானியம் கிராம ஊராட்சிகள் திட்டத்தின் கீழ் ரூ.6.70 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிமெண்ட் சாலை பணிகளையும், 15வது மத்திய நிதி குழு மானியம்,சுகாதாரம் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் மலைக்கோவிலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் உள்ளே, வட்டார பொது சுகாதார நிலைய, புதிய கட்டிடம் நடைபெற்று வரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். ஆய்வின் நிறைவில் அதிகாரிகளை அழைத்து, நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடிப்பதற்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, உதவி பொறியாளர் குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமாவதி, தேன்மொழி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News