கூட்டத்திலிருந்து வெளியேறிய ஆட்சியர்- விவசாயிகள் அதிர்ச்சி

அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து ஆட்சியர் வெளியேறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-01-25 00:37 GMT


அரியலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து ஆட்சியர் வெளியேறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு, ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. அப்போது விவசாய சங்கத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் பேசும்போது, ஏரியில் 15 அடிமுதல் 20 அடி ஆழம் வரை மண் அள்ளுவதாக குற்றம்சாட்டினார். அப்போது எந்த இடம் என குறிப்பிட்டு கூறுங்கள் என மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா கேள்வி எழுப்பினார்.

ஆனால் அவர் எதுவும் கூறாத நிலையில், ஓகே அடுத்த கேள்விக்கு வாருங்கள் என ஆட்சியர் கூற, அப்போது குறுக்கிட்ட தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் எழுந்து, நீங்கள் எப்படி அடுத்த கேள்விக்கு வாருங்கள் என கூறலாம் எனவும், நீங்கள் மாவட்ட ஆட்சியரா அல்லது முதலமைச்சரா என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா, விஸ்வநாதனை வெளியேற்ற காவல்துறைக்கு உத்தரவிட்டார். ஆனால் காவல்துறையினர் வெளியேற்றாமல் நின்று கொண்டிருந்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா, அந்த கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News