வெள்ளப்பகுதிகளை பகுதிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

Update: 2023-11-07 11:36 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கன மழை பெய்தது எண்பத்தி எட்டு மில்லி மீட்டராக பதிவான இந்த இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது திருச்செங்கோடு நகராட்சி சேர்ந்த சாணார்பாளையம், கொட்டகாடு, கூட்டப்பள்ளி,சங்கங்காடு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்தது.

இது குறித்த தகவல் அறிந்த திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் சேகர், நகர் நல அலுவலர் வெங்கடாசலம்,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, பகுதி நகர்மன்ற உறுப்பினர்கள் மல்லிகா, மற்றும் சம்பூரணம் ஆகியோர் உடனடியாக வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு மழைநீர் வடிய தேவையான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர் இதனால் படிப்படியாக வெள்ளநீர் குறைந்தது, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்த தகவலை அறிந்த திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, தாசில்தார் விஜயகாந்த் உள்ளிட்ட அதிகாரிகள் கொட்டங்காடு சங்கங் காடு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நேரில் வருகை தந்தார்,அதிகாரிகளை அழைத்து நிரந்தர தீர்வு காண என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் ஏற்கனவே போடப்பட்ட திட்டம் எந்த அளவில் செயல்பாட்டில் உள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா கூறியதாவது திருச்செங்கோடு நகரத்தில் உள்ள வார்டு எண் 19, 21-க்கும் இடையில் உள்ள தரைப்பாலம் நேற்று பெய்த 80 மில்லி மீட்டர் மலையால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்து இந்த பகுதியில் உள்ள நகர மன்ற தலைவர் கோட்டாட்சியர் வட்டாட்சியர் வருவாய்த் துறையினர் நேரடியாக வந்து உதவி செய்து பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து சில பகுதிகளை இடித்துவிட்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர், இது நிரந்தர தீர்வு அல்ல என்ற போதும் இந்த வீணாகும் தண்ணீரை கலெக்ஷன் பாயிண்ட் என்று சொல்லப்படுகிற ஒரு இடத்தில் சேகரிக்க திட்டமிடப்பட்டு அதற்கான திட்ட மதிப்பீடு அரசின் கவனத்தில் உள்ளது அந்தத் திட்ட மதிப்பீடு குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் நிரந்தர தீர்வு காணப்படும் 19 வது வார்டு பகுதியில் 10 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது, இன்று எதுவும் தேவைப்படாத நிலையில் வழித்தடமும் மாற்று வழி உள்ளதால் அவர்களுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இன்றும் கனமழை பெய்து ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து உணவு உடை இருக்க இடம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது இதுகுறித்து மக்களிடம் பேச நாம் இன்று வந்துள்ளோம் பள்ளிபாளையத்தில் மேம்பாலப் பணிகள் நடப்பதால் பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி இருந்தது. தற்போது அந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது நேற்று பெய்த மழையில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட பள்ளிபாளையம் திருச்செங்கோடு பகுதிகளில் தண்ணீர் இப்பொழுது சீராக சென்று கொண்டிருக்கிறது மேலும் இன்றும் மழை பெய்து தண்ணீர் அதிகமாக வந்தால் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அது குறித்து ஆய்வு செய்யவே அனைத்து துறை அதிகாரிகளையும் இங்கு வரச் சொல்லி ஆய்வு செய்திருக்கிறோம்.

நாமக்கல் மாவட்டத்தில் பொருத்தவரை காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பில் வைத்துள்ளோம் பிளேட்லெட் குறைந்து போய் ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் இல்லை என்பதால் காய்ச்சல் எங்கு அதிகமாக இருந்தாலும் உடனடியாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ராசிபுரத்தில் இருந்து சேலத்திற்கு அருகாமையிலும் பள்ளிபாளையம் ஈரோட்டுக்கும் அருகாமையிலும் இருப்பதால் அண்டை மாவட்டங்களிலும் காய்ச்சலில் உள்ளவர்கள் குறித்த கண்காணிப்பை செய்து வருகிறோம்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஐந்து நகராட்சிகள் 19 பேரூராட்சிகள் 15 ஒன்றியங்களில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் தொடர் கண்காணிப்பு செய்து வருகிறோம் எனக் கூறினார், இந்த ஆய்வின்போது திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, வட்டாட்சியர் விஜயகாந்த், நகராட்சி ஆணையாளர் சேகர், பொறியாளர் சரவணன், நகர் நல அலுவலர் வெங்கடாசலம், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் மல்லிகா, சம்பூர்ணம், தாமரைச்செல்வி மணிகண்டன், சினேகா ஹரிகரன், செல்வி ராஜவேல், செல்லம்மாள் தேவராஜன், ஆகியோர் உடன் இருந்தனர்

Tags:    

Similar News