இணைய வழி பட்டா வரன்முறைப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

இணைய வழி பட்டா வரன்முறைப்படுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

Update: 2023-12-08 12:25 GMT
மாவட்ட ஆட்சியர் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், தொண்டிபட்டி, சின்னமணலி, மல்லசமுத்திரம் கீழ்முகம் மற்றும் வட்டூர் ஆகிய பகுதிகளில் இணைய வழி பட்டா வரன்முறைப்படுத்தும் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், தொண்டிபட்டி பகுதியில் இணைய வழி பட்டா வரன்முறைப்படுத்தும் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, சின்னமணலி, மல்லசமுத்திரம் கீழ்முகம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தற்போது வரை இணைய வழி பட்டா வரன்முறைப்படுத்தும் பணிகள் மேற்கொண்ட விவரங்களை விரிவாக கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், திருச்செங்கோடு வட்டம், வட்டூர் பகுதியில் இணைய வழி பட்டா வரன்முறைப்படுத்தும் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம், தொட்டிபட்டி ஊராட்சி அருந்ததியர் தெரு பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் செந்தில் வீடு முதல் குணசேகரன் வீடு வரை ரூ.5.58 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது திருச்செங்கோடு வட்டாட்சியர் திரு.விஜயகாந்த் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News