கிணற்றில் தவறி விழுந்து விவசாயி பலி - மாட்டை தடுத்தபோது விபரீதம்

Update: 2023-11-30 06:15 GMT

சடலமாக மீட்கப்பட்ட பழனியப்பன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, செம்பியநத்தம் அருகே உள்ள பூசாரிபட்டி பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் 49. விவசாயி. இந்நிலையில் நவம்பர் 29ஆம் தேதி காலை 8:30- மணி அளவில் அவரது மாட்டை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது, அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றின் ஓரம் மேய்ந்து கொண்டிருந்த மாடு, திடீரென கிணற்றில் தாவ முற்பட்டது. இதனை கண்ட பழனியப்பன் அதனை தடுக்க முயற்சித்துள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக தண்ணீர் இல்லாத அந்த 90 அடி ஆழ கிணற்றில் மாட்டுடன் பழனியப்பன் தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த மாடும், பழனியப்பனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி கன்னியம்மாள், பாலவிடுதி காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் உயிரிழந்த பழனியப்பன் மற்றும் மாட்டையும் மீட்டனர். பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக அருகில் உள்ள திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பழனியப்பன் உடலை அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News