மதுராந்தகம் அருகே கோவிலுக்கு வருகை புரிந்த ஜார்கண்ட் ஆளுநர்

மதுராந்தகம் அருகே பழமை வாய்ந்த சிவன் ஆலயத்தை காண வந்த ஜார்கண்ட் ஆளுநர் ஆளுநருக்கு பரிவட்டம் கட்டி கும்ப கலச மரியாதையுடன் வரவேற்ற ஆலயத்தினர்.

Update: 2024-03-11 15:08 GMT

கோவிலுக்கு வருகை தந்த ஜார்கண்ட் ஆளுநர் ராதாகிருஷ்ணன்

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அகத்திய பெருமானும், ராமபிரானும் வழிபட்ட அருள்மிகு அன்னை ஆனந்த வள்ளி தாயார் உடனுறை ஆபத் சகாயேஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்ளது.

இந்தக் கோயிலை இன்று ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்ய வந்தார்.. ஆலய நிர்வாகிகள் ஆளுநருக்கு சண்டிமேளம் முழங்க பரிவட்டம் கும்ப கலச மரியாதையுடன் வரவேற்றனர்.

பின்னர் சிவனை வழிபட்டு தீப ஆராதனை செய்து இன்று முதல் இணையதளம் மூலம் இக்கோவிலின் வரைபடத்தை கூகுள் மேப்பில் பார்க்கும் வசதியை இணைத்தார். இதில் ஏராளமான கட்சி பிரமுகர்கள்,பக்தர்கள் கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News