காங்கிரஸ் கட்சியே வேண்டாம் என்பதுதான் இந்திய மக்களின் எண்ணம்- ராமலிங்கம் பேட்டி
காங்கிரஸ் கட்சியே வேண்டாம் என்பதுதான் இந்திய மக்களின் எண்ணம்- ராமலிங்கம் பேட்டியளித்துள்ளார்.
Update: 2024-02-17 05:59 GMT
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பிப்ரவரி 21ஆம் தேதி பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை நடைப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்துவது தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் சின்னதாராபுரத்தில் உள்ள சிவ செல்வி திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பரமத்தி தெற்கு ஒன்றிய தலைவர் தங்கவேல், கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம், பாராளுமன்ற தொகுதி இணை பொறுப்பாளரும் கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் ஆன சக்திவேல் முருகன், சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத்தலைவரும் சேலம் பெருங்குற்ற பொறுப்பாளருமான கே பி ராமலிங்கம் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்தார் ராமலிங்கம், அப்போது, வரும் கரூர் நாடாளுமன்ற தொகுதியில், கரூர் எம்பி ஜோதிமணிக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியினரே கூட்டம் போட்டு தெரிவித்துள்ளனர். ஆனால், காங்கிரஸ் கட்சியே வேண்டாம் என்பதுதான் இந்திய மக்களின் எண்ணமாக உள்ளதாக தெரிவித்தார