சாலை மறியல் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்த எம் எல் ஏ
சாலை மறியல் ஈடுபட்டவர்களை எம்எல்ஏ சமாதானம் செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-17 09:38 GMT
சமாதானம் செய்த சட்டமன்ற உறுப்பினர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உலகியநல்லூரில் டிராக்டரில் மோதி விபத்தில் பலியான மூன்று மாணவர்களின் உறவினர்கள் குற்றவாளியை கைது செய்யக்கோரி விருகாவூர் மும்முனை சந்திப்பில் கள்ளக்குறிச்சி இருந்து விருத்தாசலம் நெடுஞ்சாலையில் நூற்றுக்கு மேற்பட்டோர் கொட்டும் மழையில் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு,
வாகன விபத்தில் பலியான மூன்று மாணவர்களின் உறவினர்களிடம் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். உடன் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ் மற்றும் போலீஸார்கள் உள்ளனர்.