தி நவோதயா அகாடமி மாணவி தொடர் சிலம்பம் சுற்றும் போட்டியில் கின்னஸ் சாதனை !!
தி நவோதயா அகாடமி மாணவி தொடர் சிலம்பம் சுற்றும் போட்டியில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
தி நவோதயா அகாடமி மாணவி தொடர் சிலம்பம் சுற்றும் போட்டியில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அக். 23 நாமக்கல் தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவி ஜி. ஹனுமித்ரா அவர்கள் 2 மணி 15 நிமிடங்கள் தொடர் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். கரூரில் உள்ள எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியில் டாக்டர் ஏ.பி.ஜே, அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவ்விழாவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்தும், பள்ளிகளில் இருந்தும் மாணவிகள் கலந்துகொண்டு தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தினார்கள். அவ்விழாவில் கரூர் சிலம்பம் பயிற்சி அகாடமி நடத்திய சிலம்பம் போட்டியில் நாமக்கல் நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி மாணவி ஜி. ஹனுமித்ரா அவர்கள் தொடர்ந்து இரண்டு மணி பதிணைந்து நிமிடங்கள் சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.
இன்று பள்ளியில் காலையில் நடைபெற்ற வழிப்பாட்டுக்கூட்டத்தில் பதக்கமும் பாரட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.பள்ளியின் பொருளாளர் தேனருவி அவர்கள் சான்றிதழை வழங்கி மாணவியை வாழ்த்தினார்கள். அவர் பேசுகையில், “இந்த குழந்தைச் செல்வம் இந்த வயதில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக்காட்டியுள்ளது. உலகம் போற்றும் சாதனையாளராக கண்டிப்பாக வளர்ந்து வருவார் என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு அதற்கு பள்ளி நிர்வாகம் என்றும் துணையாக இருக்கும் என்றும் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறி பாராட்டினார்கள். பள்ளி முதல்வர் ஆசிரியர்கள், சக மாணவ, மாணவியர்கள் அனைவரும் வெகுவாக வியந்து பாராட்டினார்கள்.