புதிய சமுதாயக்கூடம் - சிவகாமசுந்தரி.எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
பொம்மனூத்துப்பட்டியில்,புதிய சமுதாயக்கூடத்தை கிருஷ்ணராயபுரம் சிவகாமசுந்தரி எம்.எல்.ஏ திறந்து வைத்தார்
By : King 24x7 Website
Update: 2023-12-06 08:28 GMT
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், ஜெகதாபி ஊராட்சியில் உள்ள பொம்மனூத்துபட்டியில், புதிய சமுதாயக்கூடம் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 19.67- லட்சம் மதிப்பீட்டில் கட்ட துவக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, இன்று கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி புதிய சமுதாயக் கூட்டத்தை திறந்து வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில், திமுக தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளராக ரகுநாதன், ஜெகதாபி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், ஜெகதாபி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சக்திவேல், புதிய சமுதாயக் கட்சி ஒப்பந்ததாரர் சுப்பிரமணி மாறன், மற்றும் ஊர் பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.