விபத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் பலி

விழுப்புரம் மாவட்டம், ராதாபுரம் அருகே சாலை விபத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-05-30 17:23 GMT
பலியானவர்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சிறுவள்ளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் கருணாகரன் (வயது38). இவர் தொரவி கிராமம் அருகே வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார். நேற்று மாலை கருணாகரன் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் புதுவை மாநிலம் திருக்கனூர் சென்று விட்டு, மீண்டும் தொரவி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போதுராதாபுரம் அருகே வந்தபோது, அவர் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து விட்டார்.

Advertisement

இதில் பலத்த காயமடைந்த அவரை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கருணாகரன் இன்று காலை பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் இறந்த கருணாகரனுக்கு ஆதிலட்சுமி என்ற மனைவியும், புவியரசன் என்ற மகனும், கயல்விழி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News