விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு
காமராஜபுரத்தில் சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Update: 2024-01-11 11:13 GMT
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் வயது 45. இவரது மனைவி சுமதி வயது 43. கதிரேசன் கடந்த செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி ஒரு சாலை விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை அளித்தும் மிக மோசமான நிலைமையில் இருந்த அவரை, மீண்டும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கதிரேசனின் மனைவி சுமதி கரூர் காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த கதிரேசனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்