சேறும்,சகதியுமாக மாறிய சாலையால் கிராம மக்கள் அவதி!
Update: 2023-12-23 11:22 GMT
புதுக்கோட்டை கத்தக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட நம்புகுழி வருவாய் கிராமத்தில் உள்ள சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நிலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக சேறும், சகதிகமாக மாறிவிட்டதால் இந்த சாலையை பயன்படுத்தும் நம்புகுழி, கத்தக்குறிச்சி, கூடலூர், கன்னியாபட்டி, பழங்குடி கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். நடப்பதற்கு கூட தகுதியற்ற நிலையில் உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இனியாவது காலம் தாழ்த்தாமல் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.