கீழ்பவானி அணையின் நீர்மட்டம் 76.05 அடி - நீர் வரத்து 24167 கன அடி
Update: 2023-11-23 02:49 GMT
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் விவசாயத்திற்கும் பவானிசாகர் அணை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 76.05 அடியாகவும், நீர் இருப்பு 13.68 டி.எம்.சி ஆகவும் உள்ளது. நீர் வரத்து வினாடிக்கு 24167 கன அடியாக உள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழையால் கால்வாய்களில் நீர் திறக்கப்படவில்லை.