வாக்குச்சாவடி மைய எல்லை கோடுகள் வரையும் பணிகள் தொடக்கம்

அரசிராமணி செட்டப்பட்டியில் வாக்குச்சாவடி மைய எல்லை கோடுகள் வரையும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-02 17:31 GMT

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசிராமணி, செட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிமையங்களுக்கு முன்னர் பாதுகாப்பு எல்லை கோடுகளை வருவாய்த்துறையினர வரைந்தனர். ம

க்களை தேர்தல் ஏப்.19ம் தேதி நடைபெறுவதையொட்டி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரின் நாமக்கல் மக்களவை தொகுதிக்குட்பட்ட சங்ககிரி வட்டம், அரசிராணி செட்டிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலர் மலர்விழி தலைமையில் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் வாக்குச்சாவடி மையத்திலிருந்து 100, 200 மீட்டர் அளவுகளை கணக்கீடு செய்து பாதுகாப்பு எல்லைகோடுகளை வரையும் பணியினை தொடங்கி ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News