மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் அலங்கார தேர்பவனி
Update: 2023-12-03 11:41 GMT
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற, புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்கு, திருவிழா, தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெற்றது .விழாவின் முக்கிய நிகழ்வான, சிறப்பு திருப்பலி ,மற்றும் திருத்தேர் பவனி நடைபெற்றது .மயிலாடுதுறை மறை மாவட்ட அதிபர் பேரருள் தாசிஸ் ராஜ் அடிகளார், தலைமையில், நடைபெற்ற திருப்பலியில் உலக அமைதிக்காகவும், இயற்கை சீற்றங்களில் இருந்து, மக்கள் பாதுகாக்கப்படவும் ,விவசாயம் செழிக்கவும் சமத்துவம் ,சகோதரத்துவம், நிலைத்திடவும் வேண்டி ,சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து ,வான வேடிக்கையுடன் தொடங்கிய தேர் பவனி , ஆலய வளாகத்தில் இருந்து துவங்கி ,அரசு மருத்துவமனை சாலை என முக்கிய வீதியில் வழியாக சென்று,மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.