பா.ம.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!
ஆரணி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து பா.ம.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-23 09:56 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் பா.ஜனதா கூட்டணியில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. பா.ம.க. வேட்பாளராக ஏ.கணேஷ்குமார் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து எம்.ஜி.ஆர். சிலை அருகே பா.ம.க. மாவட்ட செயலாளர் ஆ.வேலாயுதம் தலைமையில் பா.ஜனதா, புதிய நீதி கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.