தீர்த்தக் குட ஊர்வலம்

மேட்டூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தக் குட ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-12-12 12:58 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நங்கவள்ளி அருகே கரட்டு பட்டி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்ற 12 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவடைந்தது. நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று கரட்டுப்பட்டி கிராமங்களை சேர்ந்த சுமார் 500 கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் மேட்டூர் அணையின் நீர் தேக்க பகுதியான திப்பம்பட்டி காவிரியில் இருந்து தீர்த்த குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் பம்பை மேளம் முழங்க நாட்டு மாடுகளும், வெள்ளை குதிரைகளும் அணிவகுத்து செல்ல காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, பெண்கள் கடவுள் வேடமிட்டு நடனமாடி சென்றனர்.
Tags:    

Similar News