பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் 301 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
Update: 2024-01-14 01:12 GMT
தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழாவையொட்டி உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், எல்லா செல்வங்களும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டி, மழைவெள்ளத்தால் பாதித்த அனைத்து மக்களை காக்க வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக அம்மனுக்கு தீப அலங்காரம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் மஞ்சள்குலை, பொங்கல்பூ, மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.