ஆரணியில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை
Update: 2023-11-26 08:35 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் பாஞ்சாலி அம்மன் திருமண மண்டபத்தில் குமுதம் பக்தி மலர், ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் மற்றும் ஸ்ரீதர்மராஜா ஆலயம் ஆகியோர் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை திமுக அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் கப்பல் கங்காதரன் தலைமையில் நடைபெற்றது . மேலும் உலக நன்மை வேண்டியும் குழந்தை பாக்கியம் தோஷங்கள், நீங்கிட திருமண தடை நீங்கவும் ஸ்ரீ பாஞ்சாலி அம்மன் சமேதஸ்ரீதரமராஜா ஆலய மகாலக்ஷ்மி அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் வேத மந்திரங்கள் முழங்க பெண்கள் நீண்ட வரிசையில் அமர்ந்து குத்து விளக்கேற்றி மஞ்சள் குங்குமத்தில் அர்ச்சனை செய்து திருவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். இதில் கோவில் நிர்வாகிகள் ரேணுகா கங்காதரன், கண்ணன்,தனசேகர், ரமேஷ் அருணகிரி பாஸ்கரன் மற்றும் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.