திருமயம் அருகே தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது
திருமயம் அருகே தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-03 10:08 GMT
கோப்பு படம்
திருமயம் அருகே விராச்சிலை மந்தையம் மன்கோயில் வீதியை சேர்ந்தவர் முருகன். முருகன் தன் வீட்டிற்கு ஊராட்சி அனுமதியின்றி குடிநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்தி உள்ளார். இது குறித்து ஊராட்சி தலைவரிடம் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் தகவல் கொடுத்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த முருகன் தனது உறவினர் யுவராஜ் என்பவருடன் சேர்ந்து செந்தில் குமாரை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த செந்தில்குமார் திருமயம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட் டுள்ளார்.
இது குறித்த புகாரின்பேரில் பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன், யுவராஜ் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.