தபாலில் மனு அனுப்பிய பாமகவினர்

Update: 2023-11-03 08:49 GMT

தபால் அனுப்பிய பாமகவினர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள எலந்த குட்டை அஞ்சல் நிலையத்தில் தபாலில் கோரிக்கை மனு வழங்கும் நிகழ்வு, பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் நடைபெற்றது... நிகழ்விற்கு சமூக நீதிப் பேரவை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.

இதில் கோரிக்கைகளாக பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படையில் எண்ணற்ற நூற்ப்பாலைகளும் பல்வேறு தொழில்களும், பெருகி உள்ளதால், அதிகளவு வட மாநில தொழிலாளர்கள் நூற்ப்பாலைத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.. தற்போது வெப்படை பகுதி அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக உருவாகி வருவதால் ,குற்ற செயல்களை தடுக்கும் வகையில் ,வெப்படை காவல் நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் " மேலும் குமாரபாளையம் தாலுகாவாக பிரிக்கப்பட்டு எட்டு ஆண்டுகள் கடந்தும் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படாத நிலை உள்ளது.

இதனால் பெண்கள் புகார்கள் கொடுக்க 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே வெப்படை மையப்படுத்தி புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவானது,தமிழக முதல்வருக்கும் மற்றும் உள்துறை செயலாளருக்கும் அனுப்பப்பட்டது. இந்த நிகழ்வில் பாமக ஒன்றிய செயலாளர் தமிழரசு, சமூக ஊடகப் பேரவை மாவட்ட செயலாளர் சந்தோஷ் ,மாவட்ட தொழிற்சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்டம் மாணவரணி செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் நிகழ்வின்போது உடன் இருந்தனர்...

Tags:    

Similar News