திருப்பத்தூர்: 2 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு
திருப்பத்தூர் அருகே குரிசிலாப்பட்டு பகுதியில் 2 வயது பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Update: 2024-06-05 07:20 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குறிசிலா பட்டுபகுதியில் வசித்து வரும் விக்னேஸ்வரன் இவரது 2 வயது மகள் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து விட்டது இவரது பெற்றோர்கள் பதறி அடித்துக் கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே வரும் வழியில் உங்களது குழந்தை இறந்து விட்டது என்று கூறி விட்டனர் பெற்றோர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது இது குறித்து குரிசிலாபட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது