சங்கரநாராயண சாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றம்
கொடியேற்றும் நிகழ்ச்சியில் பக்தர்கல் பலர் பங்குபெற்றனர்
Update: 2023-12-18 04:25 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று.இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்றது. திருவாதிரை திருவிழாவில் முக்கிய திருவிழா ளான விநாயகர் தேரோட்டம் 9ம் திருநாளான வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. சிகர நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா 10ம் திருநாளான வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டக படித்தார்கள் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.