மேட்டூர் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மேட்டூர் அணை பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

Update: 2023-11-13 08:54 GMT

பூங்காவில் விளையாடும் சிறுவர்கள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக மேட்டூர் அணை பூங்கா விளங்குகிறது. நீர்வளத்துறை சார்பில் பூங்கா நுழைவு கட்டணமாக பயணிகளிடம் ரூ.5 வசூல் செய்யப்படுகிறது . இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனால் .உள்ளூர் மட்டுமின்றி சேலம், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் மேட்டூர் பூங்காவிற்கு வந்தனர். இவர்கள் அணையின் கிளைவாய்க்கால் மட்டம் பகுதியில் நீண்ட நேரம் நீராடினர். பின்னர் அணை கட்டு முனியப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

சிறுவர் சிறுமிகள் பூங்காவில் உள்ள தூரி ,சர்கல் விளையாண்டு மகிழ்ந்தனர். அசைவ பிரியர்கள் சாலையோர கடை களில் சமைத்த அணையில் பிடிக்கப்பட்ட மீன்களை உண்டனர். இதனால் சாலையோர சிற்றுண்டி கடைகளுக்கு வருவாய் அதிகரித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் பூங்காவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லாததால் சாலையில் நிறுத்தப்பட்டது இதனால் கொளத்தூர்- மேட்டூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News