வர்த்தகர்கள் சங்க பொன் விழா ஆண்டு
Update: 2023-12-18 04:09 GMT
வர்த்தகர்கள் சங்க பொன் விழா
திண்டுக்கல் வர்த்தகர்கள் சங்கத்தின் பொன் விழா ஆண்டு வர்த்தகர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, வர்த்தகர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். சங்க முதுநிலை தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக நாகா பிளவர் மில் நிர்வாக இயக்குனர் கமலக்கண்ணன்,ஜி.ஆர்.பி., நெய் உரிமையாளர் பாலசுப்பிரமணியம், கோயம்புத்தூர் லட்சுமி செராமிக்ஸ் உரிமையாளர் முத்துராமன் வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம் வாழ்த்தி பேசினார். மேலும் பொன்விழா ஆண்டு மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கலந்து கொண்டனர்.