பள்ளத்தில் சிக்கிய காரால் போக்குவரத்து பாதிப்பு
பள்ளிபாளையம் காவல் நிலையம் அருகே பள்ளத்தில் சிக்கிய காரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலம் அருகே சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிபாளையம் காவல் நிலையம் அருகே சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு, ஒருவழிப்பாதையாக வாகனங்கள் சென்று வருகின்றது.
இந்நிலையில் எதிர்பாராதவிதமாக அவ்வழியே சென்ற கார் ஒன்று சாக்கடை கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கியது. இதனால் வாகனம் மேலே செல்ல முடியாமல் தவிப்புக்கு உள்ளானது. ஒருவழிப்பாதையில் அதிக வாகனங்கள் சென்று கொண்டு இருந்த நிலையில் நடு சாலையில் கார் நின்றதால் பிரதான சாலை பகுதி முழுவதும் வாகனங்கள் செல்ல முடியாமல் தேங்கி நின்றது .இதனை அடுத்து அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் உதவியுடன் கார் கயிறு கட்டி இழுக்கபட்டு பள்ளத்திலிருந்து மீட்கப்பட்டது. இதன் பிறகு போக்குவரத்து சீரானது .இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.