சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு

சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

Update: 2023-12-18 02:42 GMT

சர்வீஸ் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில் சேலம் கோவை புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்காக வாகனங்கள் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளன. கத்தேரி பிரிவு முதல் வட்டமலை சர்வீஸ் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், வாகனங்கள் இந்த பகுதியில் செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. பொதுநல ஆர்வலர்கள் பலமுறை அந்த பகுதி ஆக்கிரமிப்பாளர்களிடம் சொல்லியும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றி, வாகனங்கள் எளிதில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் சாலை பணிகள் நடந்து வரும் பகுதியில், ஒரு பக்கமிருந்து, மறு பக்கத்திற்கு சிறு பாதை இருந்தாலும், அதன் வழியாக டூவீலர் ஓட்டுனர்கள் சென்று கொண்டுள்ளனர். இதனை தவிர்க்க, இது போன்று வேலைக்கு இடையூறாக இருக்கும் வாகனங்களை பறிமுதல் செய்தும், ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 
Tags:    

Similar News