துலுக்கமுத்தூரில் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி குறித்த பயிற்சி

அவிநாசி வட்டம் துலுக்கமுத்தூரில் விவசாயிகளுக்கான பயிர் சாகுபடி குறித்த பயிற்சி நடைபெற்றது.

Update: 2024-02-07 08:57 GMT


அவிநாசி வட்டம் துலுக்கமுத்தூரில் விவசாயிகளுக்கான பயிர் சாகுபடி குறித்த பயிற்சி நடைபெற்றது.


துலுக்கமுத்தூரில் விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி குறித்த பயிற்சி திருப்பூர், அவினாசி வட்டம் துலுக்கமுத்தூரில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டம், ஊட்டச்சத்துமிக்க சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி சார்ந்த ராபி பருவ தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது.

இதில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் திட்ட ஆலோசகர் அரசப்பன், திருப்பூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகி, வேளாண்மை அலுவலர் சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, திவ்யபாரதி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதில் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் வேளாண்மை திட்டங்கள், மானிய விவரங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் திட்ட ஆலோசகர் அரசப்பன் தானியங்களில் உள்ள ஊட்டச்சத்து விவரம், கோடை உழவு செய்யும் முறை, குறுகிய கால தானியம் மற்றும் தட்டு மகசூல் தரவல்ல சோளத்தின் சிறப்பம்சங்கள், திரவ உயிர் உரங்கள் பயன்படுத்துதல், தானிய நுண்ணூட்டம் இடுதல் குறித்து விளக்கினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News