வேளாண் நறுமணப்பொருட்கள் ஏற்றுமதி குறித்த பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் இரண்டு நாள் வேளாண் நறுமணப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் இரண்டு நாள் வேளாண் நறுமணப் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. இது குறித்து வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்பயிற்சியில் உழவர்கள்,உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், பெண்கள்,இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள்,இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் பங்கு பெறலாம்.
இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் வருகிற 20.11.2023 மற்றும் 21.11.2023 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சிக்கான கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூபாய் 3540/- வசூலிக்கப்படுகிறது. பதிவுக்கு Kitchen எண்ணிகையிலான இடங்களே மீதம் உள்ளது. மேலும் பதிவுக்கு மின்னஞ்சல் business@tnau.ac.in மற்றும் தொலைபேசி எண்: 0422 - 6611310 அலைபேசி 99949 89417 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.