மழையில் சாய்ந்த மரம் - 3 மணி நேரம் மின் நிறுத்தம்
Update: 2023-11-03 01:54 GMT
குமாரபாளையத்தில் நேற்று மாலை கன மழை பெய்தது. இதனால் மேற்கு காலனி தாசில்தார் அலுவலகம் அருகில் பெரிய மரம் ஒன்று சாய்ந்தது. இதனால் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் வந்து, சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் மின் விநியோகம் வழங்க மூன்று மணி நேரம் ஆனது. அதிக தொழில் நிறுவனங்கள் உள்ள இந்த பாதையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.