தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நிறுவனர் நாராயணசாமி நாயுடு நினைவஞ்சலி

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நிறுவனர் நாராயணசாமி நாயுடு நினைவஞ்சலி

Update: 2023-12-21 10:01 GMT

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், கோவில்பாளையம் அருகே உள்ள வையம்பாளையம் கிராமத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் நிறுவிய மறைந்த உழவர் பெருந்தலைவர் C.நாராயணசாமி நாயுடு உழவர் போராளி அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் R.வேலுசாமி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் S.பழனிமுருகன், மாறிய பொருளார் S.ராஜேஷ், மாநில செயலாளர் V.வேல்நாயக்கர், மாநில துணைத்தலைவர் K.ராஜாபெருமாள், மாநில செயலாளர் வேலூர் மண்டலம் M.வெங்கட்டபதிரெட்டி, மாநில செயலாளர் மதுரை மண்டலம் CN.ராஜேந்திரன் மற்றும் கோவை மாவட்ட தலைவர் K.சுப்பரமணி, கோவை மாவட்ட செயலாளர் S.தடாகம் கணேசன், கோவை மாவட்ட துணைத்தலைவர் B.ரங்கநாதன், கோவை மாவட்டம் Dr.K.ராஜ்குமார், R.திலீப் மற்றும் கோவை வீரியம்பாளையம் வேணு உட்பட விவசாய சங்க முக்கிய நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில், தமிழக விவசாயிகள் அதிகப்படியாக தென்னை சாகுபடி செய்து தேங்காய் உற்பத்தி செய்து வருகின்றனர். அவ்வப்போது தேங்காய் விலை வீழ்ச்சி மற்றும் தேங்காய் கொப்பரை பருப்பு விலை வீழ்ச்சி அடிக்கடி ஏற்படுகிறது. தேங்காய் விலை வீழ்ச்சி மற்றும் கொப்பரை பருப்பு விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்தவும், தென்னை விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழக அரசிடம் கள்ளுக்கடை திறக்க பலமுறை கோரிக்கை வைத்தோம். தமிழக அரசு தென்னை விவசாயிகளின் நலன் கருதி கள்ளுக்கடை திறக்க இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழக அரசு மதுபானத்திற்குதான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

தமிழ்நாடு அரசு மதுவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழக தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய் மற்றும் கொப்பரை பருப்புக்கு முத்தியததுவம் கொடுப்பதில்லை. ஆகையால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்து விவசாய தொழில் நலிவடைந்து பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழக அரசு இன்னும் இரண்டு மாதங்களில் தமிழக தென்னை விவசாயிகளின் நிலைமை அறிந்து உடனடியாக தமிழக அரசு கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். தமிழக அரசு தமிழக விவசாயிகளின் நிலைமையை அறியாமல் கள்ளுக்கடை திறக்க மறுத்தால் வருகின்ற 15.03.2024 அன்று தமிழகத்தில் உள்ள தென்னை விவசாயிகள் அனைவரும் தங்களது நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் கள்ளுகட்டி, கள் இறக்கி விற்பனை செய்வார்கள் என்பதை தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். தமிழக விவசாயிகள் தங்களது நிலத்தில் தென்னை மரத்தில் கள்ளு கட்டி, கள்ளு விற்பனை செய்யும் பொழுது தமிழக அரசு காவல்துறையை வைத்து விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்து அடக்குமுறை செய்தால் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் தோழமை கட்சிகள் அனைத்தையும் தமிழக விவசாயிகள் தோற்கடித்து காட்டுவார்கள் என்பதை தி.மு.க. அரசுக்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் எச்சரிக்கை விடுகின்றோம்.

Tags:    

Similar News