அரசு சார்பில் சுதந்திரபோராட்ட வீரர் தீரன்சின்னமலைக்கு மரியாதை

சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த பவானி பிரிவு சாலை பகுதியில் 75வது குடியரசுதினவிழாவை முன்னிட்டு அரசு சார்பில் சுதந்திரபோராட்ட தியாகிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2024-01-26 13:13 GMT


சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த பவானி பிரிவு சாலை பகுதியில் 75வது குடியரசுதினவிழாவை முன்னிட்டு அரசு சார்பில் சுதந்திரபோராட்ட தியாகிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.


75வது குடியரசு தினத்தினையொட்டி தமிழக அரசு சார்பில் சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த பவானி பிரிவு சாலை பகுதியில் உள்ள சுதந்திரபோராட்ட வீரர் தீரன்சின்னமலையின் மணி மண்டபத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்படடிருந்த அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. சங்ககிரி மலையில் சூழ்ச்சியால் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட சுதந்திரபோராட்டவீரர் தீரன் சின்னமலைக்கு தமிழ அரசு சங்ககிரி அருகேயுள்ள பவானி பிரிவு சாலை அருகே தமிழகரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது இந்நிலையில் நாட்டின் 75வது குடியரசுதினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது .

அதனையடுத்து சுதந்திர போராட்ட வீரர்களுககு மரியாதை செலுத்தும் வகையில் தமிழகரசின் சார்பில் சங்ககிரி உட்கோட்ட வருவாய்த்துறையின் சார்பில் வருவாய்கோட்டாட்சியர் லோகநாயகி தலைமையில் வருவாய்துறையினர் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுதந்திரபோராட்ட வீரர் தீரன்சின்னமலை யின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது சங்ககிரி வட்டாட்சியர் அறிவுடைநம்பி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News