வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு முத்தரப்பு வாரியம்

வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க மத்தியிலும் மாநிலத்திலும் சட்டம் கொண்டு வந்து விரைவில் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் முத்தரப்பு வாரியம் அமைத்து அவர்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு சமூக பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-02-21 04:25 GMT

செய்தியாளர் சந்திப்பு 

திருச்சி பிரஸ் கிளப்பில் தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் மேடையின் ஒருங்கிணைப்பாளர் கிளாரா, தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் சங்க மாநில தலைவி சீதாலட்சுமி கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது , நாடு முழுவதும் வீடுகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 4 கோடிக்கு அதிகமாகவும் தமிழகத்தில் 20 லட்சம் பேரும் இருக்கின்றனர் அவர்களை பாதுகாக்கும் விதத்தில் நாடு முழுவதும் 60 சங்கங்கள் 20 தேசிய சங்கங்களை இணைத்து தேசிய வீட்டு வேலை தொழிலாளர்கள் மேடை செயல்பட்டு வருகிறது.

வீட்டு வேலை தொழிலாளர்களை பாதுகாக்க நம் நாட்டிலும் மாநிலத்திலும் எந்த விதமான சட்டங்களும் இல்லை வீட்டு வேலை தொழிலாளர்களில் 80 சதவீதம் பெண்களாக இருப்பதால் பலவிதமான துன்புறுத்தலுக்கும் பாலியல் வன்முறைக்கும் அவர்கள் ஆளாகின்றனர். எனவே வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க மத்தியிலும் மாநிலத்திலும் சட்டம் கொண்டு வந்து விரைவில் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் முத்தரப்பு வாரியம் அமைத்து அவர்களுக்கான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு சமூக பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்.

வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ பிஎப் பிடித்து மாதம் ரூபாய் 5 ஆயிரத்துக்கு குறையாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் மேலும் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் தமிழகத்தில் வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு தனி வாரியம் அமைக்கப்பட்டு இருந்தாலும் அதற்கு போதுமான நிதி ஆதாரமில்லாததால் உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. குறைந்தபட்ச நிதி உதவியும் வழங்க காலதாமதம் ஏற்படுகிறது இதனால் வீட்டு வரியில் ஒரு சதவீதத்தை வீட்டு வேலை தொழிலாளர்கள் நல வாரியத்திற்கு அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்கும் விசாகா கமிட்டியில் பாதிக்கப்படும் தரப்பை சார்ந்த யாரும் இல்லாததால் அதற்கு உரிய நியாயம் கிடைப்பதில்லை. இதனால் பெண்கள் தரப்பிலும் கமிட்டியில் உறுப்பினர் இடம் பெற வேண்டும் 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த தொழிலாளர்களுக்கான நான்கு வரைவு சட்டத்தில் வீட்டு வேலை தொழிலாளர்கள் சேர்க்கப்படவில்லை எனவே அந்த வரைவு சட்டங்களை கைவிட வேண்டும் நாடு முழுவதும் நால்வரில் ஒருவராக இருக்கும் வீட்டு வேலை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்த முன்வரும் அரசியல் கட்சிகளுக்கே நாங்கள் ஆதரவு தெரிவித்து ஓட்டளிப்போம் என கூறினார்.

Tags:    

Similar News