சுனாமி : 19 ஆண்டுகளாகியும் கிடைக்காத பட்டா - 800 பேர் பாதிப்பு

சுனாமியால் பாதிக்கப்பட்டு கடந்த 19 ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் அவதிப்படும் 800க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என குளச்சல் நகர அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2024-05-14 03:55 GMT
குளச்சல் நகர அதிமுக கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்  குளச்சல் நகர அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர அலுவலகத்தில் நடைபெற்றது. செயலாளர் ஆண்ட்ரூஸ் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவர் அணி முன்னாள் செயலாளர் ரவீந்திர வர்ஷன்,  நகர முன்னாள் செயலாளர்கள் அருள்தாஸ் முன்னிலை வகித்தனர்.நகர மகளிர் அணி செயலாளர் சுபசந்தியா வரவேற்று பேசினார்.   நகர இணை செயலாளர் ஷெர்பா தீர்மானங்கள் வாசித்தார். நகர முன்னாள் செயலாளர் பஷீர் கோயா, முன்னாள் கவுன்சிலர்கள் சூசை மரியான், ஃபெலிக்ஸ் ராஜன், மரியவிக்டர், பென்சிகர், வக்கீல் சந்திரசேகர் உட்ப்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  

  இந்த கூட்டத்தில் குளச்சல் நகரப் பகுதியில் சுற்றித் திரியும் தெரு  நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.      கடந்த 2004-ம் ஆண்டு  சுனாமி தாக்குதலில் பாதிக்கப்பட்டு குளச்சல் லியோன் நகர், குழந்தை இயேசு காலனி கொட்டில் பாடு காலனி ஹரிதாஸ் காலனி மற்றும் ஆசாத் நகர்  ஆகிய பகுதிகளில் 800-க்கும் மேற்பட்ட வீடுகளில் 19 வருடமாக வசித்து வரும் பொது மக்களுக்கு பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், குளச்சலில் தங்கு தடை இன்றி மின்வினியோகிக்க  செய்ய கேட்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் வரவேற்கப்பட்டன. நகர மகளிர் அணி இணை செயலாளர் அம்பிகா நன்றி கூறினார்.

Tags:    

Similar News