பைக் களவாணிகள் இருவர் கைது
கும்பகோணம் அருகே பைக் திருடர்கள் இருவரை பொறிவைத்து பிடித்த போலீசார் அவர்ககளை கைது செய்து 7 பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-06 07:15 GMT
கும்பகோணம் மதகடித் தெருவைச் சேர்ந்தவர் ராஜாமணி மகன் சுரேஷ் (45). இவர் திருவலஞ்சுழி காவிரி ஆற்றுக்கரை பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். திரும்பி வந்து பார்த்த போது அவரது பைக் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுபற்றி சுரேஷ் சுவாமிமலை காவல்நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் திருவலஞ்சுழி கோணக்கரை சாலையில் வந்த இருவரை மறித்து விசாரித்ததில் அவர்கள் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம், சாந்தனப்பட்டு, நடுத்தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (42) மற்றும் கும்பகோணம் மேலக்காவிரி ஜாமியா நகரைச் சேர்ந்த முகம்மது ரபிக் (28), என்பது தெரியவந்தது. விசாரணை செய்தபோது சுரேஷின் இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை திருடியது தெரிந்தது. மேலும் இவர்கள் அரியலுார், திருச்சி, சென்னை, நாகை, தஞ்சை மாவட்டங்களில் தொடர் வாகன திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 7 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து கைது செய்தனர்.