போதை பொருள் கடத்திய இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
ராசிபுரம் பகுதியில் போதை பொருள் கடத்திய இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - ஆட்சியர் உத்தரவு.;
By : King 24x7 Angel
Update: 2024-02-13 10:08 GMT
போதை பொருள் கடத்திய இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில்
கைது
போதை பொருள் கடத்திய இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில்
கைது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்யப்பட்ட வழக்கில் இருவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் மருத்துவர் சா.உமா உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் ஒமலூர் கருப்பூர் வெள்ளாளப்பட்டி புதுத்தெரு பகுதியை சேர்ந்த வேலு மகன் சதீஸ் (30). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜக்கேரி கெலமங்களம் விருப்பாச்சிநகர் பகுதியில் வசித்து வருகிறார். இதே போல் ராசிபுரம் கட்டனாச்சம்பட்டி கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் மகன் தினேஷ் (25) ஆகிய இருவரும் கஞ்சா கடத்தி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கஞ்சா கடத்தி விற்பனை செய்து வருவதாக வந்த தகவல் பேரில் போலீஸார் நடத்தி சோதனையில் வாகனத்தில் கடந்தி வந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராசிபுரம் போலீஸார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தற்போது இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் ச.உமா உத்தரவிட்டுள்ளதையடுத்து இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.