வெள்ளகோவிலில் காரில் வந்து ஆடுகள் திருடிய இரண்டு பேர் கைது

வெள்ளகோவில் காரில் ஆடுகளை திருடிச் சென்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-06-29 08:01 GMT

வெள்ளகோவிலில் காரில் வந்து ஆடுகள் திருடிய இரண்டு பேர் கைது

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் வீரசோழபுரம் பக்கம் உள்ள பெரலைக்காட்டு வலசை சேர்ந்தவர் நல்லசாமி 67 விவசாயம் செய்து வருகின்றார். இவர் கடந்த 23ஆம் தேதி தனது தோட்டத்தில் 30 ஆண்டுகளை அடைத்து வைத்திருந்தார். இந்த நிலையில் மறுநாள் பார்க்கும்போது அந்த அடைத்து வைத்திருந்த ஆடுகளில் ஒரு கிடாய் 3 ஆடுகள் திருடு போனது தெரிய வந்தது. இதே போல் வீரசோழபுரம் பொன்பரப்பி ஆத்திக்காட்டு தோட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரவிச்சந்திரன் 45. அதே நாளில் அவருடைய பட்டியல் அடைத்து வைக்கப்பட்டிருந்த 29 ஆடுகளில் ஒரு கிடாய் 5ஆடுகள் திருட்டுப் போனது.

இந்த சம்பவம் குறித்து விவசாயிகள் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வெள்ளகோவில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையிலான காவல்துறையினர் வெள்ளகோவில் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கத்தி அருகே வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் ஆடுகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த காரை தடுத்து நிறுத்தி அதில் வந்தவர்களை விசாரணை செய்தனர். இதில் காரில் வந்த வீரசோழபுரம் பகுதியில் ஆடுகள் திருடியது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து ஆடுகள் திருட்டு தொடர்பான புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுக்கா முள்ளிக்காபுரம் பட்டியைச் சேர்ந்த முனியாண்டி மகன் ஐயப்பன் 38, அதே ஊரைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் ராமலிங்கம் 42 ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். திருட்டுப்போன 10 ஆடுகளும் மீட்கப்பட்டன திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பிறகு இருவரையும் காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர் படத்தில் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News