இரு கார்கள் நேருக்கு நேர் மோதி இருவர் பலி

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் முத்தூர் அடுத்த தண்ணீர் பந்தல் அருகே நேருக்கு நேர் மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-22 06:02 GMT

விபத்து

முத்தூர் பகுதியில் பரபரப்பு முத்தூர் -ஈரோடு சாலையில் தண்ணீர் பந்தல் என்ற இடத்தில் ஜென் காரில் சேலத்திலிருந்து சிவகிரி வழியாக வெள்ளகோவில் வருவதற்காக 1) சேதுபதி ( 24), உப்புப்பாளையம் ரோடு. வெள்ளகோவில். 2) பாண்டி (30) செம்மாண்டம்பாளையம் ரோடு. வெள்ளகோவில். 3) சதீஸ்குமார் (22) வெள்ளகோவில்ஆகியோர்கள் வந்துகொண்டிருந்தனர். மேலும் காரை பாண்டி என்பவர் ஓட்டிக்கொண்டு வந்துள்ளார். அதே ரோட்டில் எதிர் திசையில் ஐ 20 காரில் 1) கவியரசு (37) சாந்தலிங்கபுரம். முத்தூர். 2) சிவகார்த்திக் (32). சக்கரைபாளையம். முத்தூர். என்பவர்கள் எதிர்திசையில் முத்தூரிலிருந்து ஈரோடு ரோட்டில் சென்றுள்ளனர்.

மேலும் ஐ 20 காரினை கவியரசு ஓட்டிச்சென்றுள்ளார். இரண்டு காரும் எதிரெதிரே மோதியதில் ZEN காரில் பயணம் செய்த 1) சேது மற்றும் 2) பாண்டி ஆகியோருக்கு தலை மற்றும் கை கால் பகுதிகளில் பலத்த இரத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். இவர்களுடன் காரில் சென்ற சதீஸ்குமார் என்பவருக்கு தலையில் பலத்த இரத்தகாயம் ஏற்பட்டுள்ளதால் காங்கயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற இவர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேற்கண்ட மூவருமே வெள்ளகோவில் நகராட்சியில் கடந்த 6 மாத காலமாக தற்காலிகமாக எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகின்றனர்.

ஐ 20 காரில் சென்ற கவியரசு மற்றும் சிவகார்த்திக் இருவருக்குமே கை. மற்றும் கால் பகுதிகளில் மொக்கை அடி மற்றும் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் காங்கேயம் அரசு மருத்துவமனை வந்து முதலுதவி சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்கு ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் இறந்துபோன சேதுபதி மற்றும் பாண்டியின் பிரேதம் காங்கேயம் அரசுமருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து சம்பவ இடம் சென்று வெள்ளகோவில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு கார்களும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டு அதில் காரிலேயே இரண்டு பேர் இறந்த சம்பவமும் இறந்தவர்கள் காயம் பட்டவர்களை காரில் இருந்து உடைத்து வெளீயே எடுத்த சம்பவம் முத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News