டூவீலர்- ஜேசிபி மோதி விபத்து
எல்லமேடு அருகே டூவீலரில் சென்றவர்கள் மீது ஜேசிபி வாகனம் மோதி விபத்து; இருவர் படுகாயம் அடைந்தனர்.
எல்லமேடு அருகே டூவீலரில் சென்றவர்கள் மீது ஜேசிபி வாகனம் மோதி விபத்து. இருவர் படுகாயம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, நஞ்சைகாளக்குறிச்சி அருகே உள்ள கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முப்புலி வயது 53. இவர் டிசம்பர் 15 ஆம் தேதி காலை 8 மணி அளவில், அருகில் உள்ள எம்ஜிஆர் காலனி பகுதியைச் சேர்ந்த சந்தானத்துரை மனைவி கலைச்செல்வி வயது 34 என்பவரை தனது டூவீலரில் பின்னால் அமர வைத்து, நஞ்சை காளக்குறிச்சியில் இருந்து எல்லமேடு செல்லும் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
இவர்களது வாகனம், எல்லமேடு மயானம் அருகே சென்று கொண்டிருந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சந்தை கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த பெருமாள் வயது 30 என்பவர் வேகமாக ஓட்டி வந்த ஜேசிபி வாகனம், முப்புலி ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலர் உடன் கீழே விழுந்ததில் முப்புலி மற்றும் கலைச்செல்வி ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இருவரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முப்புலி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை மேற்கொண்ட காவல்துறையினர், ஜேசிபி வாகனத்தை கவன குறைவாகவும், வேகமாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய பெருமாள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சின்ன தாராபுரம் காவல்துறையினர்.