மருத்துவர் நகரில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் படுகாயம்.
மருத்துவர் நகரில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, மணவாடி, பெரியார் நகரை சேர்ந்தவர் சின்னதுரை மகன் விஜய் வயது 26. இவர் ஏப்ரல் 27ஆம் தேதி காலை 10:45 மணி அளவில், கரூர் - ஈரோடு சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் ஆத்தூர் பிரிவு,
அடுத்து உள்ள மருத்துவர்நகர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, அதே சாலையில் எதிர் திசையில் TN 47 S 2958 என்ற எண் கொண்ட மற்றொரு டூவீலர் வேகமாக வந்து, விஜய் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விஜய்க்கு வலது தோள்பட்டை, இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால்,
உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக விஜய் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்
, இது தொடர்பாக டூவீலரை கவன குறைவாகவும் வேகமாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய டூவீலர் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.