சைக்கிள் மீது அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து
முதியவர் ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது, அடையாளம் தெரியாத டூவீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.;
Update: 2024-04-11 15:57 GMT
காவல்துறை விசாரணை
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, லிங்கத்தூர் அருகே உள்ள உப்பிடமங்கலம், வடக்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி வயது 76. இவர் ஏப்ரல் 10-ம் தேதி காலை 7 மணி அளவில், உப்பிடமங்கலத்தில் இருந்து கரூர் செல்லும் சாலையில் அவருக்கு சொந்தமான சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் லிங்கத்தூர் மயானம் அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் பின்னால் வேகமாக வந்த ஒரு டூ வீலர், கந்தசாமி ஓட்டிச் சென்ற சைக்கிள் மீது மோதி விட்டு, மின்னல் வேகத்தில் நிற்காமல் சென்று விட்டது. இந்த சம்பவத்தில் நிலை தடுமாறி சைக்கிள் உடன் கீழே விழுந்த கந்தசாமிக்கு வலது கால் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கந்தசாமி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த டூவீலர் எது? டூவீலரை ஓட்டிய நபர் யார்? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.